FIFA WC 2022 | உலகக் கோப்பையில் இருந்து விலகினார் கரீம் பென்சிமா: நடப்பு சாம்பியன் பிரான்ஸுக்கு பின்னடைவு

By செய்திப்பிரிவு

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கரீம் பென்சிமா, காயம் காரணமாக விலகியுள்ளார். இது நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்றுகோலாகலமாக தொடங்கியது.கால்பந்து ரசிகர்களை கட்டி போடப்போகும் இந்த கால்களின் திருவிழா வரும் டிசம்பர் 18 வரை நடைபெற உள்ளது. கால்பந்து திருவிழாவில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில், 4 முறை பட்டம் வென்றுள்ள ஜெர்மனி, தலா 2 முறை வாகை சூடி உள்ள அர்ஜென்டினா, பிரான்ஸ், உருகுவே மற்றும் தலா ஒரு முறை கோப்பையை கைகளில் ஏந்தியுள்ள இங்கிலாந்து ஸ்பெயின் ஆகிய அணிகள் மீண்டும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட களத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் இந்த தொடரில் களமிறங்கியுள்ள பிரான்ஸ் அணிக்கு பெரும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இடது தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகி உள்ளதாக பிரான்ஸ் கால்பந்து அணி தெரிவித்துள்ளது. காயம் குணமடைய 3 வார காலம் ஆகும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

34 வயதான கரீம் பென்சிமா பிஃபா தரவரிசையில் மெஸ்ஸிக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் உள்ளார். உலகக் கோப்பைகளில் 5 போட்டிகளில் விளையாடி 3 கோல்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருதை கரீம்பென்சிமா வென்றிருந்தார். இதனால் அவர், மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. கடைசி நேரத்தில் பென்சிமா விலகி உள்ளது பிரான்ஸ் அணிக்கு சிக்கலை உருவாக்கி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 mins ago

சினிமா

21 mins ago

வாழ்வியல்

3 mins ago

தமிழகம்

39 mins ago

க்ரைம்

46 mins ago

வணிகம்

50 mins ago

சினிமா

47 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்