சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 15-ம் தேதிக்குள் வெளியாக வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 15-ம் தேதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் (2021-2022) 10, 12-ம்
வகுப்புகளுக்கு இரு பருவ பொதுத்தேர்வு முறையை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியது.

அதன்படி, முதல் பருவ பொதுத்தேர்வை நவம்பர்-டிசம்பர் மாதத்திலும், 2-வது பருவ பொதுத்தேர்வை மார்ச்-ஏப்ரல் மாதத்திலும் நடத்த முடிவுசெய்தது. அவ்வாறே முதல் பருவ தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.

இதைத்தொடர்ந்து, 2-வது பருவ பொதுத்தேர்வுகள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24-ம் தேதி வரையும், அதேபோல், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 26 முதல் ஜுன் 15-ம் தேதியும் நடத்தப்பட்டன. 10-ம் வகுப்பு தேர்வை 21 லட்சத்து 16 ஆயிரத்து 209 பேரும், 12-ம் வகுப்பு தேர்வை 14 லட்சத்து 54 ஆயிரத்து 370 பேரும் எழுதியுள்ளனர்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10-ம், வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஜுன் 20-ம் தேதி ஒரேநாளில் தேர்வு முடிவுகள் வெளியாயின. அதைத்தொடர்ந்து, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேரவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைபெற்று வருவதால் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதற்கிடையே, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் ஜுலை 4-ம் தேதி (நேற்று) வெளியிடப்படலாம் என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் அதன் இணையதளத்தில் அதிகாப்பூர்வமாக அறிவிக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளது.

பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து சிபிஎஸ்இ வட்டாரத்தில் விசாரித்தபோது, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 15-ம் தேதியும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

54 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்