‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’: நாளை மாலை 6 மணிக்கு ஆன்லைன் கலந்துரையாடல்

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு நாளை (செப்-25) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

நாளைய இந்தியாவை வளமானதாகவும். அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க வேண்டுமென்று விரும்பியவர் அப்துல் கலாம். கலாமின் மறைவுக்குப் பின்னர், அவரது அறிவியல் சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வை தொடர்ந்து நடத்தி வருகிறது.

அதன்படி, நாளை (சனி) மாலை6 மணிக்கு ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் ஆன்லைன் சிறப்புக்கலந்துரையாடல் நிகழ்வு நடக்கிறது. இதில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற இயக்குநரும், ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு, முன்னாள் விண்வெளி விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து ஆகியோர் பங்கேற்று, கலந்துரையாட உள்ளனர்.

இந்த நிகழ்வில் அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/00064 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

55 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்