ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: என்டிஏ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தேர்வானது தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பாண்டுக்கான முதல் 3 கட்ட தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதன்பின் கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட 4-ம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 26 முதல் செப்.2-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வை நாடு முழுவதும் 925 மையங்களில் 4.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.அதற்கான தேர்வு முடிவுகள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன.

மாணவர்கள் https://jee main.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோல், ஜேஇஇ முதல் நிலைத் தேர்வுகளின் கட்ஆப் மதிப்பெண், மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் உட்பட இதர விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். இந்த 4 தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அதிகபட்ச மதிப்பெண் சேர்க்கைக்கான கணக்கில் எடுத்துக் கொள்ளப்பபடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

27 mins ago

வாழ்வியல்

18 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்