‘இந்து தமிழ் திசை’, சோனா குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் சார்பில் ‘வாழ்வை உயர்த்தும் உயர்கல்வி’ வழிகாட்டு நிகழ்ச்சி: இன்று காலை 10.30 மணிக்கு ஆன்லைனில் நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்து என்ன படிப்பது, எங்கு படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்கள், பெற்றோருக்கு எழும். அத்தகைய மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள், வழிகாட்டுதலை வழங்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’,சோனா குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து ‘வாழ்வை உயர்த்தும் உயர்கல்வி’ எனும் இணைய வழி ஆலோசனை நிகழ்வை இன்று நடத்துகின்றன.

உயர்கல்வி கற்று, வாழ்வின் அடுத்தகட்ட உயரங்களைத் தொட விரும்புவோருக்கான படிக்கட்டுகளை அமைத்து தரும் எண்ணத்தோடு இது நடத்தப்படுகிறது.

இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி, 12.30 மணி வரை நடக்க உள்ள இந்த ஆலோசனை நிகழ்வில், சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பி.குழந்தைவேல், சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் காலேஜ் முதல்வர் டாக்டர் வி.கார்த்திகேயன், சேலம் சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி முதல்வர் டாக்டர் எஸ்ஆர்ஆர் செந்தில்குமார், சேலம் சோனா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் & சயின்ஸ் முதல்வர் டாக்டர் ஜி.எம்.காதர் நவாஸ் பங்கேற்று, ஆலோசனைகள், வழிகாட்டுதலை வழங்க உள்ளனர்.

இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/3zFdUgK என்ற லிங்க்கில் பதிவுசெய்துகொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

33 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்