ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவி உலக சாதனை: திருவள்ளுவர் படத்தை வரைந்தபடி திருக்குறளை ஒப்பித்தார்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பாடசாலையைச் சேர்ந்த மாணவி செ.லக்க்ஷனா திருவள்ளுவர் இயற்றிய 1,330 திருக்குறளையும் மனப்பாடமாக சொல்லிக்கொண்டே 13 அடி அகலம், 30 நீளம் அளவில் அய்யன் திருவள்ளுவரின் படத்தை 1 மணி 30 நிமிடத்தில் வரைந்து உலக சாதனை படைத்துள்ளார்.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கடந்த ஆக.28-ம் தேதி சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாளர் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தார். பொதுமக்கள், மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இச்சாதனை நிகழ்வில் பள்ளித் தமிழாசிரியர்கள் செந்தில்குமார், அப்புன், சிவராமன் கலைக்கூட ஓவிய ஆசிரியர் கணேசன் பங்கேற்றனர்.

உலகிலுள்ள அனைத்து மக்களும் திருக்குறள் வழியில் செல்லவும் திருக்குறளை பின்பற்றி ஒழுக்க நெறியில் செழித்தோங்கவும் விரும்புவதாக லக்க்ஷனா கூறினார்.

இச்சாதனை நிகழ்வு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு, கலாம் புக் ஆஃப் அவார்டு சாதனை புத்தகங்களில் இடம் பெற உள்ளது. இம்மாணவியை ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமத் தாளாளர் விஷ்ணு சரண், பள்ளி முதல்வர்களும் தலைமை ஆசிரியர்களும் தமிழ் ஆசிரியர்களும் வாழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்