‘இந்து தமிழ் திசை’ - அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டு நிகழ்ச்சி: ஆன்லைனில் இன்றும், நாளையும் மாலை 4.30 மணிக்கு நடக்கிறது

By செய்திப்பிரிவு

பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது,எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு என மாணவ, மாணவியருக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் வகையில் ‘இந்துதமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சியை கடந்த ஜூலை 10 முதல் ஆன்லைனில் நடத்தி வருகிறது.

அதன்படி இன்று (சனி) மாலை4.30 முதல் 6.30 மணி வரை நடைபெறவுள்ள இந்த ஆலோசனை நிகழ்வில், பயோ-டெக், பயோ-மெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்பு பற்றி ஜெர்மனி செர்டாரா ஸ்டாட்ரெஜி கன்சல்டிங் மருத்துவ மருந்தியல் இயக்குநர் டாக்டர் ஜி.சுப்ரமணியன், சென்னை விபாஜோன் நிறுவனர் முத்து சிங்காரம், சென்னை விஸ்டாஸ் பயோ-டெக் துறை துணைப் பேராசிரியர் டாக்டர் பி.பிருந்தா தேவி ஆகியோர் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

நாளை (ஞாயிறு) மாலை 4.30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், சட்டப் படிப்புகள் பற்றி சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.தியாகராஜன், வருமான வரித்துறை முன்னாள் மூத்த நிலை ஆலோசகரும் வழக்கறிஞருமான என்.முரளிகுமாரன், சென்னை விஸ்டாஸ் ஸ்கூல் ஆஃப் லாதுணைப் பேராசிரியர் வி.கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்று,ஆலோசனைகள் வழங்கவுள்ள னர்.

இந்த நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி காலேஜ் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.

நிகழ்வில் பங்கேற்க கட்டணம்இல்லை. பங்கேற்க விரும்புவோர், https://bit.ly/3wxsbK6 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்