ஆகஸ்ட் 2 முதல் தினமும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் விநியோகம், கல்வித் தொலைக்காட்சி வழியில் பாடம் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துதல், பள்ளி வளாகங்களை பராமரித்தல் போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கண்ட பணிகளை துரிதப்படுத்த அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்
றும் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 2-ம்தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்த
குமார் உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்