10, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாண வர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பில் தாம தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்களுக்கு கல்வித் தொலைக் காட்சி மற்றும் இணையவழியில் தற் போது பாடங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. அத்துடன், வாட்ஸ்-அப் உள் ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகள் வழியாக பாடங்கள் குறித்த மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

இந்நிலையில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்கு நரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் விவரம்:

கரோனா பரவல் அச்சத்தால் வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தச் சூழலில் மாணவர்கள் கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். அதற்காக மாணவர்கள் இணைய வகுப்புகளில் பங்கேற்பதை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்த வேண்டும். நேரடி கற்பித்தல் தடைபடுவதால் புதிய வழி முறைகளைப் பின்பற்றி ஆசிரியர் கள் இணைய வழியில் பாடங்களை நடத்த வேண்டும்.

அதேபோல், பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதந்தோறும் அலகுத் தேர்வுகளை இணையவழியில் நடத்த வேண்டும். தேர்வுக்கான வினாத்தாள்களை மாவட்ட அல்லது வட்டார அளவில் ஆசிரியர்கள் மூலம் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

தேர்வு நாளில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் வழியாக மட்டுமே வினாத் தாள்கள் அனுப்பப்பட வேண்டும். இதற்காக பிரத்யேக வாட்ஸ்-அப் குழுக்கள் பாடவாரியாக தொடங்கப்பட வேண்டும்.

மாணவர்கள் தேர்வு எழுதிய பின்னர் விடைத்தாள்களை பெற்று அவற்றை திருத்தம் செய்து ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.

இந்த தேர்வுகளில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறும் பகுதி களை கண்டறிந்து கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும்.

இதுதவிர செல்போன் வசதி இல்லாத வர்கள் அருகே உள்ள பிற மாணவர் களிடம் சென்று வினாத்தாள் பெற்றுக் கொள்ள வழிசெய்ய வேண்டும். தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் விவரங்களை பட்டியலாக தயாரித்து தலைமை ஆசிரியர்கள் சேகரித்து வைத்திருக்க வேண்டும்.

அதேபோல், முக்கிய பாடங்கள், வினாக்கள் உள்ளிட்ட விவரங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற வழிவகை செய்ய வேண்டும். கரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் மாணவர்களுக்கு அறி வுறுத்த வேண்டும். மேலும், இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு அலகுத் தேர்வுகள் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

க்ரைம்

17 mins ago

வணிகம்

21 mins ago

சினிமா

18 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

உலகம்

40 mins ago

வணிகம்

46 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்