குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதே பள்ளிகள் திறப்புக்கான வழி: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

பள்ளிகளைத் திறப்பதற்கும் குழந்தைகளின் வெளிச் செயல்பாடுகளுக்கும் அவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதே வழியாக அமையும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா பேசியுள்ளார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் நேற்று அவர் அளித்த பேட்டி:

’’குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்துவது என்பது ஒரு மைல்கல் சாதனையாக இருக்கும். 2 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவு செப்டம்பர் மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடங்கும். எனினும் அதற்கு முன்னர் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைத்தால் அந்தத் தடுப்பூசியைக் குழந்தைகளுக்குச் செலுத்த வாய்ப்புள்ளது.

இந்திய மருந்து நிறுவனமான சைடஸ் கேடில்லா தயாரித்து வரும் கரோனா தடுப்பூசியான சைகோவ்-டி விரைவில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தடுப்பூசி அவசர கால ஒப்புதலுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பம் செய்ய உள்ளது. இதைக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இரு தரப்புக்கும் செலுத்தலாம். சைகோவிக்-டி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் அதுவும் குழந்தைகளுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கும்.

கரோனா பெருந்தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைச் சரி செய்ய கரோனா தடுப்பூசி செலுத்துவது முக்கியப் பங்கு வகிக்கும். வைரஸ் பெருந்தொற்றில் இருந்து வெளியே வரவும் தடுப்பூசியே சிறந்த வழி’’.

இவ்வாறு எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கரோனா பெருந்தொற்று இதுவரை குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கவில்லை. எனினும் கோவிட் 19 வைரஸ் தொற்று உருமாற்றம் அடைந்தால் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தயாராக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்