உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் மாநிலளவில் 3வது இடம் பிடித்த மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி

By செய்திப்பிரிவு

மதுரையில் கடந்த 1965ல் தொடங்கப்பட்ட ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி தனது விடாமுயற்சியால் தமிழகத்தின் முதல்நிலை அந்தஸ்து பெற்றது.

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி 1998ம் ஆண்டில் மதுரை காமராசர் பல்லைக்கழகத்தின் இணைந்தேற்பு பெற்று தன்னாட்சி அங்கீகாரம் பெற்றது. 2014ல் நாக் தரமதிப்பீட்டுக் குழுவால் மூன்றாவது சுழற்சியில்‘ ஏ ’ கிரேடு வாங்கியது.

தற்போது 15 இளங்கலை (5 வகுப்புகள் 2 வதுசுழற்சி), 15 முதுகலை, 7 எம்பில், 4 பிஎச்டி பாடத்திட்டங்களை கொண்டு செயல்படுகிறது. தற்போது 4815 மாணவிகள் படிக்கின்றனர். 154 பேராசிரியர்களும், 36 கவுரவ விரிவுரையாளர்களும், 21 அலுவலக பணியாளர்களும் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை டெல்லியிலுள்ள ‘ சி- போர் ’ என்ற ஆராய்ச்சி மையம், எஜூகேஷன் வேர்ல்ட் என்ற பத்திரிகை வெளியிட்டது.

இதன்படி, ஆசிரியர்களின் திறன், அவர்களின் மேம்பாடு, பாடத் திட்டம், கற்பித்தல் (டிஜிட்டல் தயார்நிலை) வேலை வாய்ப்பு அல்லது சுய தொழில் வாய்ப்பு, உட்கட்டமைப்பு மற்றும் தலைமை, நிர்வாகத் தரம் அடிப்படையில் 2020-2022 தரவரிசை கணக்கெடுப்பில் பங்கேற்ற முதல் 100 அரசு தன்னாட்சி கல்லூரிகளில், மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரி 700 மதிப்பெண்களில் 429 மதிப்பெண்களைப் பெற்று, தேசியளவில் 42 வது இடத்தையும், மாநிலளவில் 2வது இடத்தையும் (2வதுமுறை) பெற்றுள்ளது என, அக்கல்லூரியின் முதல்வர் சூ.வானதி தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ஆசிரியர்களின் திறமை குறித்த அளவுகோலில் 140க்கு 132 மதிப்பெண்கள் பெற்றுள்ளோம். இதற்காக தனது கல்லூரி ஆசிரியைகளுக்கு வாழ்த்துக்கள். கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.

இவர்களின் பங்களிப்பால் பல பரிசுகளை பெற்றுள்ளோம். இந்த தரவரிசைக் கணக்கெடுப்பில் மதிப்புமிக்க உள்ளீடுகளை வழங்கி, கல்லூரியை முன்னிலைக்கு கொண்டு சென்ற பங்கேற்பாளர்களுக்கும் நன்றி.

இது பேராசிரியர்கள், மாணவிகளை மேலும் ஊக்குவிக்கும். எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க இச்சாதனை தூண்டுதலாக அமையும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

2 mins ago

சினிமா

7 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்