பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் பேரிடர், பெருந்தொற்று மேலாண்மை: ஒடிசா முடிவு

By பிடிஐ

பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் பேரிடர், பெருந்தொற்று மேலாண்மை குறித்த படிப்புகளை அறிமுகப்படுத்த ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்றுக்கு ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதேபோல இயற்கைச் சீற்றங்கள், பேரிடர்களும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றன. இவற்றால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் பேரிடர், பெருந்தொற்று மேலாண்மை குறித்த படிப்புகளை அறிமுகப்படுத்த ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறும்போது, "மாநிலத்தில் அறிவுபூர்வமான கட்டமைப்பை உருவாக்கி ஒவ்வொருவரையும் வீரர் ஆக்குவதற்கான நேரம் வந்துள்ளது. இன்று நாம் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த முடிவை எடுத்துள்ளோம். நாம் அறிந்த நெருக்கடி நிலைகளை எப்படிக் கையாள்வது, நமக்குத் தெரியாத நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்துப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்போதிருந்து ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளி மாணவரும், கல்லூரி மாணவரும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகப் பேரிடர், பெருந்தொற்று மேலாண்மை குறித்துக் கற்றுக் கொள்வர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இவற்றைக் கற்பிப்பர். அரசு அதன் ஊழியர்களுக்கும் பேரிடர் மற்றும் பெருந்தொற்று மேலாண்மை குறித்துப் பயிற்சி அளிக்கும். அரசுப் பணிக்கான தேர்வுகளின் பாடத்திட்டங்களிலும் இவை இருக்கும்,.
அடிப்படையில் ஒடிசாவின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வீரர் இருக்க வேண்டியதே இதன் முக்கிய நோக்கம்" என்று முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர்கள் சிலர் கூறும்போது, "அடிக்கடி ஏற்படும் புயல்கள், பெருந்தொற்று ஆகியவற்றின் சவால்களை எதிர்கொள்ள அனைத்து மக்களும் தயாராக இருக்க வேண்டும். பேரிடருக்குத் தயாராக ஒட்டுமொத்தச் சமூகத்தின் ஈடுபாடு அவசியம்" என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "ஒரு காலத்தில் பேரழிவுகளை எதிர்கொண்டு, உயிர்களை இழக்கும் மாநிலமாக ஒடிசா பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஒடிசா பேரிடர் மேலாண்மை மாதிரி, உலகளாவிய பாராட்டைப் பெற்று வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 mins ago

தமிழகம்

15 mins ago

சினிமா

33 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

52 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்