எஸ்ஆர்எம் - ‘தி இந்து’ குழுமம் இணைந்து நடத்தும் எஸ்ஆர்எம் மெய்நிகர் தொழிற்கல்வி வழிகாட்டி மாநாடு: இன்றும், நாளையும் நடக்கும் 3 அமர்வுகளில் இலவசமாக பங்கேற்க பதிவு செய்யலாம்

By செய்திப்பிரிவு

எஸ்ஆர்எம் அறிவியல், தொழில் நுட்ப மையம், ‘தி இந்து’ குழுமம் இணைந்து ‘எஸ்ஆர்எம் மெய்நிகர் தொழிற்கல்வி வழிகாட்டி மாநாடு 2021’ நடத்தப்படுகிறது. தற்போதைய சூழ்நிலைக்கு அறிவியல், பொறி யியல், தொழில்நுட்ப படிப்புகள் எந்த அளவுக்கு பொருத்தமானது என்பது குறித்து 15 பிரிவுகளாக இணையவழியில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இதன் 4-வது அமர்வு இன்று (மே 15) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. "கோவிட்-19 பேரிடர் காலத்தில் கற்றல் முதல் வேலைகள் வரை தொழில்நுட்ப கண்ணோட்டத்தை செயற்கை நுண்ணறிவு எவ்வாறு மாற்றுகிறது மற்றும் மாணவர்கள் மீதான அதன் தாக்கம்" என்ற தலைப்பில் இக்கூட்டம் நடைபெறும். பின்னர் மாணவர்கள், பெற்றோர் தங்கள் சந்தேகங்களை வல்லுநர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம்.

வல்லுநர்கள் குழுவில் இன்டெல், ஏபிஜே குளோபல் பார்ட்னர்ஷிப் அண்டு இனிஷியேட்டிவ்ஸ் நிறுவன இயக்குநர் ஸ்வேதா குரானா, சென்னை ஐஐடி உதவி பேராசிரியர் பிரத்யூஷ் குமார், எஸ்ஆர்எம்ஐஎஸ்டி, ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங் உதவி பேராசிரியர் ஆர்.ஆனி உத்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மெட்டாபர்ஸ் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த் வெங்கடேஸ்வரன் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

மெய்நிகர் முறையில் நடைபெறும் இந்த அமர்வில் இலவசமாக பங்கேற்க http://bit.ly/SRMTHE4 என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

இம்மாநாட்டின் 5-வது அமர்வு இன்று (மே 15) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. "பெருந் தொற்று காரணமாக தலைப்புச் செய்தியில் இடம்பெற்றுள்ள சைபர் பாதுகாப்பு கவலைகள்: இது மாணவர்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம்" என்ற தலைப்பில் இது நடைபெறவுள்ளது.

பின்னர் வல்லுநர்களிடம் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்ளலாம். வல்லுநர்கள் குழுவில் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான செக்யூரிடெக் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பன்கிட் தேசாய், சைபர் சட்ட வழக்கறிஞர் என்.எஸ்.நப்பின்னை, எஸ்ஆர்எம்ஐஎஸ்டி, ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங் தலைவர் ரேவதி வெங்கட்ராமன் இடம்பெற்றுள்ளனர். மெட்டாபர்ஸ் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்த் வெங்கடேஸ்வரன் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இதில் பங்கேற்க விரும்புவோர் http://bit.ly/SRMTHE5 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் 6-வது அமர்வு நாளை (மே 16) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. "கோவிட்-19 பேரிடரால் மறு வரையறை செய்யப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்க்கை முறை" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த அமர்வில் ஹாப்பிஃபிட்யூ நிறுவன பயிற்சியாளர் மற்றும் நிறுவனர் அன்ஷுலா வர்மா, டிசிஎஸ் ஐஆன் வணிகப் பிரிவு தலைவர் சி.ஏ.கிருஷ்ணன், எஸ்ஆர்ஐஎம்எஸ்டி வேலை வாய்ப்பு மைய இயக்குநர் என்.வெங்கட சாஸ்திரி ஆகியோர் வல்லுநர்களாக பங்கேற்கின்றனர். 'தி இந்து' துணை ஆசிரியர் ராதிகா சந்தானம் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இதில் பங்கேற்க http://bit.ly/SRMTHE6 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்