கரோனா பரவலால் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் ஏப்.27 வரை மூடல்: விடுதிகளைக் காலி செய்ய உத்தரவு

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் 90 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. அதில் மருத்துவம், பொறியியல், சட்டம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இணைப்புக் கல்லூரிகளில் கடந்த 19-ம் தேதி முதல் எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வுகள் தொடங்குவதாக இருந்தன. கரோனா பரவலால், இத்தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

இதற்கிடையே மத்தியப் பல்கலைக்கழகம் நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் புதுச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) சேகர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கரோனா தொற்றுப் பரவல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் இடையே எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளது.

அதனால் நாளை (ஏப்.23) முதல் வரும் 27-ம் தேதி வரை பல்கலைக்கழக வளாகம் மூடப்படுகிறது. அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தில் அத்தியாவசியப் பணிகளுக்கு இந்த மூடல் பொருந்தாது" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் மற்றொரு உத்தரவில், "கரோனா பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுதிகளில் தங்கியுள்ள பிஎச்.டி. ஆராய்ச்சியாளர்கள், மாணவ, மாணவிகள் வரும் 25-ம் தேதிக்குள் விடுதியைக் காலி செய்ய வேண்டும். விடுதிகள் திறக்கப்படும் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். விடுதிகளில் இருந்து புறப்படும்போது தங்கள் அறையில் வைத்துள்ள விலை மதிப்புள்ள சாதனங்கள், லேப்டாப், மொபைல், கல்விச் சான்றுகள் ஆகியவற்றைப் பத்திரமாகக் கையோடு எடுத்துச்செல்வது அவசியம்.

விடுதிகளில் இருந்து மாணவ, மாணவியரின் பெற்றோருக்கும், உள்ளூர் பாதுகாவலருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். அத்துடன் உணவு விடுதி வரும் 26-ம் தேதி முதல் மூடப்படும். அதேபோல் விடுதியில் தங்காத இதர பிஎச்.டி. ஆராய்ச்சியாளர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வர அனுமதி இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்