‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் - FIITJEE நடத்திய குடும்ப வேடிக்கை விநாடி வினா: வெற்றி பெற்ற குடும்பத்தினருக்கு பரிசுகள்

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், FIITJEE உடன் இணைந்து நடத்திய குடும்ப வேடிக்கை விநாடி வினா (மைண்ட் பெண்ட்) நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இன்றைய பரபரப்பான சூழலில்குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவதுஎன்பது அரிதாகி விட்டது.

இந்த நிலையை மாற்றும் வகையில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பங்கேற்கும் ‘மைண்ட் பெண்ட்’ எனப்படும் குடும்ப வேடிக்கை விநாடி வினாநிகழ்வு ஆன்லைன் வழி நடந்தது.

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களின் குடும்பம் ஜூனியர் பிரிவிலும், 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் குடும்பம் நடுத்தரப் பிரிவிலும், 11,12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் குடும்பம் சீனியர் பிரிவிலும் என 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். இந்த நிகழ்வை‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’இயக்குநர் வினோத்குமார் ஒருங்கிணைத்தார்.

ஜூனியர் பிரிவில் கல்பாக்கம் மாணவர் எம்.தினகர் குடும்பத்தினர் முதலிடத்தையும், மதுரை மாணவி ஆர்.ரேயா மரியா குடும்பத்தினர் 2-ம் இடத்தையும், சென்னை மாணவர் ஆர்.ராஜாராம் குடும்பத்தினர் 3-ம் இடத்தையும் பெற்றனர். நடுத்தர பிரிவில்ஜாம்ஷெட்பூர் மாணவி நிஷா குமாரி ஜா குடும்பத்தினர் முதலிடத்தையும், மதுரை மாணவி லிலானி குடும்பத்தினர் 2-ம் இடத்தையும், சேலம் மாணவர் டி.பி.நாத்திகன் குடும்பத்தினர் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

சீனியர் பிரிவில் புதுச்சேரி மாணவி வி.ஜெய குடும்பத்தினர் முதலிடத்தையும், பொள்ளாச்சிமாணவர் நந்த் குடும்பத்தினர் 2-ம் இடத்தையும், கோயமுத்தூர் மாணவர் விமல்ராஜ் குடும்பத்தினர் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

வெற்றிபெற்ற குடும்பத்தினருக்கு கோப்பைகள், பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 7 குடும்பத்தினருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

இந்தியா

8 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்