டான்செட் தேர்வு; அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகத்துக்கு சிறப்புப் பேருந்துகள்

By செய்திப்பிரிவு

டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகத்துக்கு மார்ச் 20, 21-ம் தேதிகளில் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாக (உறுப்புக் கல்லூரி) டீன் பேராசிரியர் செந்தில் குமார் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’எம்பிஏ, எம்சிஏ, எம்.இ., எம்.டெக். படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) வரும் மார்ச் 20, 21-ம் தேதிகளில் அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.

எம்சிஏ படிப்புக்கு 770 மாணவர்களும், எம்பிஏ படிப்புக்கு 1,315 மாணவர்களும், எம்.இ. மற்றும் எம்.டெக். படிப்புகளுக்கு 648 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

எனவே தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக, மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாகம் வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேவைப்படும் மாணவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

வலைஞர் பக்கம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

58 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்