எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி படிப்புகளுக்கான தொலைதூர கல்வி முறையில் மாணவர் சேர்க்கை: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தொலைதூரக் கல்வி முறையில் எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி படிக்கும் மாணவர்களுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைத்தூர கல்வி மையத்தின் சார்பாக எம்பிஏ, எம்சிஏ, மற்றும் எம்எஸ்சி (கணினி அறிவியல்) ஆகிய முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. எம்எஸ்சி தவிர எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான சேர்க்கை தொலைத்தூர கல்வி நுழைவுத் தேர்வு (DEET) அல்லது டான்செட் தேர்வு (2020-ம் ஆண்டு தேர்வு) மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.

இந்நிலையில், இந்த படிப்புகளுக்கு 2021-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும் இளநிலை கல்வியை 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் மட்டுமே இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு ஏப்ரல் 15-ம் தேதி வரை http://cde.annauniv.edu/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஏப்ரல் 18-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும்.

தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள்படி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 24-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும். அதேபோல், எம்எஸ்சி படிப்புக்கு ஏப்ரல் 21-ம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை http://cde.annauniv.edu என்ற இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்