மாணவர் சேர்க்கைக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பிறப்பு சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியசுற்றறிக்கை:

தமிழகத்தில் குழந்தையின் பெயரை பிறந்தநாள் முதல் 12 மாதம் வரை இலவசமாக பதிவுசெய்து கொள்ளலாம். 2000-ம்ஆண்டுக்கு முன் பெயரின்றி பதிவுசெய்யப்பட்ட பிறப்புகள் அனைத்துக்கும் 2024-ம் ஆண்டு வரைபெயருடன் பதிவு செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குரிய தாமத கட்டணம் செலுத்தி பெயரை பதிவுசெய்து பிறப்பு சான்றிதழ் பெறலாம்.

ஒருமுறை பதிவுசெய்த பெயரை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. இதுதொடர்பாக விழிப்புணர்வை அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

மேலும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழையும் கட்டாயம் பெற வேண்டும். இந்த விவகாரம் சார்ந்த அறிவுறுத்தல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

11 mins ago

தமிழகம்

22 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

59 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்