அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு, இலவசப் பேருந்து: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உத்தரவு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு, இலவசப் பேருந்து வசதி தொடர்பாக அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் தமிழிசை கலந்துரையாடினார். இதுகுறித்த செயல்திட்டத்தைத் தயாரித்துத் தரவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் இயங்கி வரும் சூழலில் மதிய உணவோ, இலவசப் பேருந்து வசதியோ இல்லாத சூழல் நிலவுகிறது. இதுபற்றி இந்து தமிழில் செய்தி வெளியானது. இதையடுத்து மதிய உணவுக்குப் பதிலாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு அரிசி தரும் பணி தொடங்கியது.

அதேநேரத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மதிய உணவு இ்ல்லாததால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றியும், இலவசப் பேருந்து வசதி தொடங்காததால் ஏழைக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாகத் துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் கேட்டதற்கு விரைவில் அதிகாரிகளுடன் கலந்து பேசுவதாகத் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று (பிப்.21) கல்வித் துறை இயக்குநர் ருத்ரகவுடுவை அழைத்து, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மதிய உணவு தருதல், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசப் பேருந்து வசதி தொடர்பாகத் தமிழிசை கலந்துரையாடினார்.

இத்திட்டத்தை அமல்படுத்த செயல்திட்டத்தைச் சமர்ப்பிக்கக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்