மின்னணு நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் பல்கலை., கல்லூரிக்கு விருது: பிப்.26-க்குள் விண்ணப்பிக்க யுஜிசி அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

மின்னணு நிர்வாகத்தில் சிறந்துவிளங்கும் கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு பிப்.26-க்குள் விண்ணப்பிக்குமாறு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

மின்னணு நிர்வாகத்தில் அரசு சேவைகள், தகவல் பரிமாற்றம், தகவல் தொடர்பு பரிவர்த்தனைகள், அரசின் பல்வேறு அமைப்புகள், தகவல் தொடர்புதொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது அரசை, பொதுமக்கள் மற்றும்தொழில்துறை உள்ளிட்ட அமைப்புகளுடன் இணையவழியில் இணைக்கும் நடைமுறையாகும்.

அதேபோல், இணையவழியாகவே மாணவர்களை இணைக்கும் கல்வி நிறுவனமும், வாடிக்கையாளர்களை இணைக்கும் தொழில் நிறுவனமும் மின்னணு நிர்வாகத்துக்குள் அடங்கும்.

இந்நிலையில், மின்னணு நிர்வாகத்தைச் சிறந்த முறையில் செயல்படுத்தும் அரசு துறைகள் மற்றும் தனியார் துறைகளை ஊக்குவிக்கும் விதமாக தேசிய மின்னணு நிர்வாக விருது வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி அனுப்பிய சுற்றறிக்கை:

தேசிய அளவிலான மின்னணு நிர்வாக மாநாடு மும்பையில் பிப்.7-8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில், மின்னணுநிர்வாகத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வித் துறையில் மாணவர்களை மின்னணு நிர்வாகம் வழியாக இணைக்கும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கும் விருது வழங்கப்படவுள்ளது.

அதன்படி, தகுதியும் விருப்பமும் உள்ள கல்வி நிறுவனங்கள்https://nceg.gov.in/ மற்றும் https://darpg.gov.in/ ஆகியஇணையதளங்கள் வழியாகபிப்.26-க்குள் விண்ணப்பிக்க லாம். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்