எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை அவசியம்: மருத்துவ கல்வி இயக்குநர் உத்தரவு

By செய்திப்பிரிவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாம்ஆண்டு மாணவர்களுக்கு கரோனாபரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர்நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் முதல்வருக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மருத்துவ மாணவர்களுக்கான அறிமுக வகுப்பு 20-ம் தேதி தொடங்க வேண்டும். முறையாக வகுப்புகள் பிப்.2-ம் தேதி தொடங்கலாம். மாணவர்களுக்கு கரோனாதொற்றை கண்டறியும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை, இதர மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும். ஆள்மாறாட்டத்தை தடுக்க அனைத்து மாணவர்களின் கல்வி, சாதி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டும். மாணவர்களின் பெருவிரல் ரேகை, விழித்திரையை பதிவுசெய்ய வேண்டும். அவர்களின்சமீபத்திய புகைப்படத்தை பெற வேண்டும். பின்னர் அனைத்து ஆவணங்களையும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள்

கல்லூரிகளுக்கு வரும் மாணவ,மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட்,ஸ்லீவ்லெஸ் மேலாடை அணியக் கூடாது. மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து வரவேண்டும். லெகிங்ஸ் அணிந்து வரக் கூடாது.

மாணவர்கள் பேன்ட், சட்டைஅணிந்து இன்செய்து கொண்டும்,ஷூ அணிந்தும் வர வேண்டும். மாணவ, மாணவிகள் வகுப்பறையில் செல்போன் உபயோகிக்கக் கூடாது. ராகிங்கை தடுக்க பேராசிரியர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்