ஆசிரியர்களின் அசல் கல்விச் சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும்: பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. உத்தரவு

By செய்திப்பிரிவு

கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் அசல் கல்விச் சான்றிதழ்களை அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைகழகப் பதிவாளர் கருணாமூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் இணைப்புக் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''அனைத்துப் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களைப் பணியமர்த்தும்போது அவர்களது அனைத்துச் சான்றிதழ்களையும் சரிபார்த்து விட்டு அசல் சான்றிதழ்களை பல்கலைக்கழகத்திடம் உடனடியாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

கல்லூரி நிர்வாகங்கள் நகலை மட்டுமே பெற வேண்டும். அதேபோல ஆசிரியர்களைப் பணியமர்த்தும் பணி வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்.

பேராசிரியர்களின் பணிச்சுமையை குறைத்து அவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதைத் தவிர்க்க, யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்க வேண்டும்''.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் நடைபெறும் பேராசிரியர் நியமனங்கள் முறையாக நடைபெறுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

கருத்துப் பேழை

9 mins ago

சுற்றுலா

46 mins ago

சினிமா

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்