இளநிலை வேளாண் படிப்புகள்: இணையவழிக் கலந்தாய்வுக்கான தரவரிசை விவரம் அறிவிப்பு

By த.சத்தியசீலன்

இளநிலை வேளாண்மைப் படிப்புகளுக்கு இணையவழிக் கலந்தாய்வுக்கான தரவரிசை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக டீன் எம்.கல்யாணசுந்தரம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு இணைய வழியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுப் பிரிவினருக்கு வரும் நவ.26 முதல் 28-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. நவ.30-ம் தேதி முதல் டிச.1-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்குக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வில் பங்கேற்கும் தரவரிசை எண் விவரம்:

பொதுப்பிரிவினர் 1 முதல் 10,755-வது தரவரிசை வரையிலும், பிற்படுத்தப்பட்டோர் 1 முதல் 10,797-வது தரவரிசை வரையிலும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் 1 முதல் 23,413-வது தரவரிசை வரையிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 1 முதல் 10,798-வது தரவரிசை வரையிலும், ஆதி திராவிடர்கள் 1 முதல் 16,971-வது தரவரிசை வரையிலும், அருந்ததியினர் 1 முதல் 20,186-வது தரவரிசை வரையிலும், பழங்குடியினர் 1 முதல் 24,509-வது தரவரிசை வரையிலும் கலந்துகொள்ள வேண்டும்.

பொதுப்பிரிவினருக்குக் கல்லூரி மற்றும் பாடப் பிரிவு விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு நேரம், தேதி உள்ளிட்ட விவரங்கள் செல்போன் அழைப்பு மற்றும் மின்னஞ்சல் மூலமாக மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும்''.

இவ்வாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக டீன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்