‘ஸ்பைரோ’, ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’: நீட் - மருத்துவக் கலந்தாய்வு குறித்து கருத்துப் பகிர்வு; ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சி- இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது

By செய்திப்பிரிவு

‘ஸ்பைரோ பிரைம் எஜுகேஷன் இன்ஸ்டிடியூட்’ உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில், நீட் - மருத்துவக் கலந்தாய்வு தொடர்பான ஆன்லைன் கருத்துப் பகிர்வு மற்றும் வழிகாட்டி நிகழ்வு இன்று (ஞாயிறு) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிந்த நிலையில், நவம்பர் இறுதி வாரத்தில் மருத்துவக் கலந்தாய்வு நடக்க உள்ளது.

இந்நிலையில், ‘ஸ்பைரோ பிரைம் எஜுகேஷன் இன்ஸ்டிடியூட்’ உடன் இணைந்து ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியில், நீட் - மருத்துவக் கலந்தாய்வு தொடர்பான வழிகாட்டி நிகழ்வு இன்று ஆன்லைனில் நடக்கிறது.

இன்று காலை 11 மணிக்கு தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், டாக்டர்எம்ஜிஆர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைவேந்தருமான டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, சென்னைஅண்ட் நாமக்கல் ஸ்பைரோ இன்ஸ்டிடியூஷன்ஸ் கல்வியாளர் எஸ்.எம்.உதயகுமார் ஆகியோர் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர்.

நீட் தேர்வில் பெற்றுள்ள கட்-ஆஃப் மதிப்பெண், மருத்துவக் கலந்தாய்வு தரவரிசை, கல்லூரிதேர்வு உள்ளிட்டவை தொடர்பாகமாணவ, மாணவிகளின் கருத்துகளை பகிர்ந்துகொள்வதோடு, மருத்துவக் கலந்தாய்வு குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

பங்கேற்க கட்டணம் கிடையாது

இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை. அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள், பெற்றோர்https://bit.ly/329GQyE, https://bit.ly/3elCnO6 ஆகிய இணையதளங்களில் பதிவு செய்துகொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

47 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்