தனியார் பள்ளி இலவச மாணவர் சேர்க்கை பட்டியல் அக்.3-ல் வெளியீடு

By செய்திப்பிரிவு

கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும்மாணவர்கள் 8-ம் வகுப்பு வரைகட்டணம் செலுத்தத் தேவைஇல்லை. அதன்படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15,763 இடங்கள் உள்ளன.

நடப்பு ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக கடந்த ஆக. 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றுமாலை நிலவரப்படி 61 ஆயிரம்பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் தனியார் பள்ளிமாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்வானவர்களின் பெயர்ப் பட்டியல் அக். 3-ம் தேதி வெளியிடப்படும். அதேநேரம், நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்