ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகின; 24 மாணவர்கள் 100% மதிப்பெண்- தெலங்கானா முதலிடம்

By செய்திப்பிரிவு

பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகின. இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோதும் திட்டமிட்டபடி ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, 6-ம் தேதி முடிவடைந்தன.

தேர்வுக்கு 8.58 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். இதில் 6.35 லட்சம் மாணவர் தேர்வில் கலந்துகொண்டனர். அதாவது 2.2 லட்சம் மாணவர்கள் (சுமார் 25% பேர்) தேர்வெழுதவில்லை.

இந்நிலையில், ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகின. இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் 8 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். டெல்லியில் 5 பேர், ராஜஸ்தானில் 4 மாணவர்கள், ஆந்திராவில் மூவர், ஹரியாணாவில் 2 பேர், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு மாணவர் 100% மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

தேர்வர்கள் jeemain.nta.nic.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து தங்களின் விண்ணப்ப எண், கடவுச்சொல் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை அறிய முடியும்.

ஜேஇஇ மெயின் தாள் 1 மற்றும் தாள் 2-ல் முதல் 2.45 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர், இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடிக்களில் மாணவர்கள் படிக்க முடியும். ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

28 mins ago

சுற்றுச்சூழல்

38 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

33 mins ago

விளையாட்டு

54 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்