தொலைதூரக் கல்வி இயக்ககம் சார்பில் வேளாண் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடக்கம்: மாணவர்கள் அதிகளவில் சேர ஆர்வம் காட்டுவார்களா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் இந்தக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் ஏற்கெனவே 9 முதுநிலை பட்டயப் படிப்புகளும், 18 சான்றிதழ் படிப்புகளும் இருந்தன. கடந்த 2019-2020-ம் கல்வியாண்டில் கூடுதலாக 30 படிப்புகள் தொடங்கப்பட்டன. இந்தப் படிப்புகள், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழி லில் ஈடுபடுவோருக்கு பயனளிக் கும் வகையில் வடிவமைக்கப்பட் டுள்ளன. தற்போது உரக்கடை போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர் கூட வேளாண் பட்டயப் படிப்புகளை படித்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதனால், இதுபோன்ற படிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்தத் தொலைதூரக் கல்வி படிப்புகளில் கடந்த ஆண்டு களில் குறைந்த எண்ணிக்கை யிலானோரே சேர்ந்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்தால்தான், மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வாராந்திர (சனி, ஞாயிறு) வகுப்புகளை நடத்த முடியும். இதன் மூலம் மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தோர் பயன்பெற முடியும். எனவே, இந்த ஆண்டு கூடுதல் மாணவர்கள் சேர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மதுரை வேளாண் மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ், தொழில்நுட்ப வல்லுநர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கூறிய தாவது:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2020-2021-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்புகள், வேளாண் இடுபொருட்களுக்கான சிறப்புச் சான்றிதழ் படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப்படிப்பு என பல பாடப்பிரிவுகள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு கோவையில் உள்ள வேளாண்மை பல்கலை. திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தை 0422-6611229 என்ற தொலைபேசி எண்ணிலும், மதுரை வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகளை 7904310808 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

ஒவ்வொரு பாடப்பிரிவிலும் குறைந்தபட்சம் 20 பேர் சேர்ந்தால் தான், மதுரை மாவட்டத்துக்கான வாராந்திர வகுப்புகளை மதுரை வேளாண்மை அறிவி யல் நிலையத்தில் நடத்த பல் கலைக்கழகம் அனுமதி வழங்கும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்