கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாணவர் தயாரித்த விதை விதைப்பு இயந்திரம் அறிமுக விழா

By எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் தயாரித்த விதை விதைப்பு இயந்திரம் அறிமுக விழா நடந்தது.

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இயந்திரப் பொறியியல் பிரிவு மாணவர் எஸ்.ராஜ்குமார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி படிப்பை நிறைவு செய்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாணவர் ராஜ்குமார் விவசாயிகளுக்கான விதை விதைப்பு மற்றும் உரம் தூவும் இயந்திரத்தை தயாரிக்க எண்ணி கல்லூரியின் என்.இ.சி. வணிக கருவகத்தை அணுகினார். இதையடுத்து என்.இ.சி. புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம் ரூ.2.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் ராஜ்குமார் தானியங்கி விதை விதைப்பு இயந்திரத்தை தயாரித்தார்.

இந்த இயந்திரத்தின் அறிமுகம் மற்றும் சந்தைப்படுத்துல் விழா நேஷனல் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல் தலைமை வகித்து, இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார்.

மாணவர் ராஜ்குமார் இயந்திரம் குறித்து கூறுகையில், இதில், டிராக்டர் ரியல் லோடர் இணைப்பு இயந்திரத்தை தயாரித்துள்ளார். இந்த இயந்திரத்தை டிராக்டரில் பொருத்தி, அதில் உள்ள பாத்திரம் போன்ற அமைப்பில் விதைகளை, ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகள் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல், அதன் மேல் உள்ள இடத்தில் தேவையான உரங்களையும் சுமார் 50 கிலோ வரை வைக்கலாம். அதன் பின்னர் நிலத்தில் உழவு மேற்கொள்ளும்போது, விதைகள் தானாக நிலத்தில் விழும். அதற்கு தேவையான அளவு அடியூரமும் அதில் தூவப்படும். இதனால் விவசாயிகளுக்கு வேலை நேரம் மிச்சப்படும். விதைகள் வீண் போகாது, என்றார்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் கே.காளிதாச முருகவேல் முன்னிலை வகித்தார். என்.இ.சி. வணிக கருவகத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.மணிசேகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

24 mins ago

ஜோதிடம்

34 mins ago

உலகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்