புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த 17 பேர் கொண்ட குழு: உ.பி. அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த 17 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ளதாக உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஜூலை 29-ம் தேதி பாஜக தலைமையிலான அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது. முன்னதாகக் காங்கிரஸ் அரசின் சார்பில் 1986-ம் ஆண்டு கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு, 1992-ல் திருத்தப்பட்டது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் உத்தரப் பிரதேச அரசு, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த 17 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியாகியுள்ளது. அதன்படி, ''புதிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக அமல்படுத்த செயல் குழுவை முதல்வர் அமைக்க உள்ளார். இதற்காக 17 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவுக்கு உத்தரப் பிரதேசத் துணை முதல்வர் தினேஷ் சர்மா தலைவராகவும் மாநில அடிப்படைக் கல்வித் துறை அமைச்சர் சதிஷ் த்விவேதி துணைத் தலைவராகவும் இருப்பார்.

உ.பி. உயர்கல்வித் துறை கவுன்சில் தலைவர் த்ரிபாதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைக் கல்வி மற்றும் உயர் கல்விப் பொறுப்பாளர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

உலகம்

2 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்