10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின; 100 சதவீதத் தேர்ச்சி

By செய்திப்பிரிவு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (ஆக. 10) காலை 9.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. இதில் 100 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 முதல் ஏப்.13 வரை நடைபெற இருந்தது. இத்தேர்வை 9,39,829 மாணவ, மாணவிகள் எழுதுவதாக இருந்தனர். இதற்கிடையே கரோனா பரவல் காரணமாக பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் தங்களின் முந்தைய பருவங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப் பதிவு செய்திருந்த 9,39,829 மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,71,759 மாணவர்களும் 4,68,070 மாணவியரும் அடங்குவர்.

தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.

1. http://www.tnresults.nic.in/

2. www.dge1.tn.nic.in

3. www.dge2.tn.nic.in

குறுஞ்செய்தி வழியாகத் தேர்வு முடிவு
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி வழியாகத் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும் குறுந்தகவல் மூலம் முடிவுகள் அனுப்பப்படும்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல்
பள்ளி மாணவர்கள் 17.08.2020 முதல் 21.08.2020 வரையிலான நாட்களில் தாங்கள் பயின்ற பள்ளித் தலைமையாசிரியர்கள் வழியாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்