நடப்பாண்டு சேர்க்கை தள்ளிப் போவதால் அரசுப் பள்ளிகளை சார்ந்திருக்கும் கிராமப்புற பெற்றோர் தவிப்பு: இடைநிற்றலும் அதிகரிக்கும் என ஊரகப் பகுதி ஆசிரியர்கள் அச்சம்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. ஆனால், தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு களை முன்னிறுத்தி பிளஸ் 1, 6-ம் வகுப்புமற்றும் மழலையர் வகுப்புக்கான சேர்க்கைகள் தொடங்கியிருக்கிறது. ‘முதல்கட்டமாக 40 சதவீத கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொள்ளலாம்’ என அரசு அறிவித் துள்ளது.

தனியார் பள்ளிகளில் சேர்க்கை மும்முரமாக நடைபெறும் சூழலில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிய ளிக்க வேண்டும் என ஆசிரியர்கள், கிராமப்புற மாணவர்களின் பெற்றோரும் வலியு றுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்ஒருவர் கூறுகையில், ”மாணவர்கள் வீடுக ளில் இருந்து பயிலும் வகையில், 1-ம் வகுப்புமற்றும் 6-ம் வகுப்பு நீங்கலாக மற்ற மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி வருகிறோம். புத்தகங்களோடு வீட்டிற்குச் செல்லும் மாணவர்களைப் பார்த்து, அந்தந்தப் பகுதி களில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளில் சேர்க்க விருப்பம் தெரிவித்து, பள்ளிகளில் வந்து விசாரித்து விட்டுச் செல்கின்றனர். அரசு அனுமதி இல்லாதாதல் நடப்பாண் டுக்கான சேர்க்கையை தொடங்க முடிய வில்லை. அரசு மாணவர் சேர்க்கைக்கு தாமதிக்கும்பட்சத்தில், தனியார் பள்ளி களை நோக்கிச் செல்லும் நெருக்கடி நிலைக்கு பெற்றோர் தள்ளப்படுகின்றனர்.

தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், கிராமப்புறப் பகுதிகளில் மாணவர்கள் பெற்றோருடன் சிறுசிறு வேலைக ளுக்குச் செல்லும் நிலையும் உருவாகி வருகிறது. இதனால் நடப்பாண்டில் இடை நிற்றல் அதிகரிக்க வாய்ப்புண்டு'' என்று தெரிவித்தார்

பேர்பெரியான்குப்பத்தைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் கூறுகையில், “எனது மகன் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது வேலை இல்லாமல் வருமானமில்லாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன். எனது மகனை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை தவிர வேறு வழியில்லை. அரசுப் பள்ளியை அணுகினால், ‘சேர்க்கைக்கு இன்னும் அனுமதிவரவில்லை’ என்று கூறுவது வேதனைய ளிக்கிறது” என்றார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வியாளரும், அரசுப் பள்ளிகள் பாதுகாப்பு மேடையின்அமைப்பாளருமான கே.திருப்பதி கூறுகை யில், "தனியார் பள்ளிகளை ஊக்குவிக்க அரசு மறைமுகமாக செயல்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. கடந்த 4 மாதங்களாக வருமானமின்றி பெற்றோர் மிகுந்தசிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை அளித்து, இடைநிற்றலை தவிர்க்க அரசு முன்வர வேண்டும்'' என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலாவிடம் கேட்டபோது, “தனியார் பள்ளிகளுக்கு விரும்பி வருவோரை சேர்த்துக் கொள் ளலாம்.

சேர்க்கைக்காக கட்டாயப்படுத்தக் கூடாது. 40 சதவீத கட்டணம் மட்டுமேவசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டி ருக்கிறோம். மீறி செயல்படுவோர் மீது புகார் தெரிவிக்கலாம்'' என்று கூறினார். ந. முருகவேல்


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

வணிகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்