பள்ளி மாணவர்களுக்கு இணையத்தில் சிறப்புப் போட்டிகள்: குடிநீர் மற்றும் பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பள்ளிக் குழந்தைகளுக்கு ஓவியம் வரைதல், கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட சிறப்புப் போட்டிகளை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கரோனா காலத்தில் கற்றல், கற்பித்தல், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்வுகள் அனைத்தும் இணைய வழியிலேயே நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை பள்ளிக் குழந்தைகளுக்கு ஓவியம், கட்டுரை உள்ளிட்ட சிறப்புப் போட்டிகளை இணையத்திலேயே அறிவித்துள்ளது.

இதன்படி, 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்படும். 9 முதல் 12-ம் வகுப்பு வரை கட்டுரைப் போட்டிகள் நடைபெறும்.

ஆகஸ்ட் 13-ம் தேதி ஆன்லைன் வாயிலாகப் பள்ளிகள் இந்தப் போட்டிகளை நடத்த வேண்டும். பள்ளிகள் அவற்றில் சிறந்த மூன்று படைப்புகளை (ஓவியம் மற்றும் கட்டுரை) மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் பொது சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதில் வெற்றி பெறும் மாணவர்கள், தேசிய அளவில் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் விழாவில் கவுரவிக்கப்படுவார்கள் என்று குடிநீர் மற்றும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அசுத்தம் இல்லாத தூய்மையான இந்தியா என்பது தொடர்பான கருப்பொருளில் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

விளையாட்டு

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்