அழகிய மொழியைப் படிக்கும் அனைவரையும் வணங்குகிறேன்: உலக சமஸ்கிருத நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

By செய்திப்பிரிவு

உலக சமஸ்கிருத நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சமஸ்கிருத மொழியை வளர்க்க ஒவ்வோர் ஆண்டும் உலக சமஸ்கிருத நாள் கொண்டாடப்படுகிறது. இது ஷ்ரவணபூர்ணிமா எனப்படும் ஷ்ரவண மாத பெளர்ணமி தினத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ''உலக சமஸ்கிருத தினத்தில், அழகிய மொழியைப் படித்து, ஊக்குவிக்கும் அனைவரையும் நான் வணங்குகிறேன். வருங்காலங்களில் சமஸ்கிருதம் வளத்துடன் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்'' என்று மோடி தெரிவித்துள்ளார்.

அதேபோல கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இந்தியாவை இணைக்கும் இணைப்பு சமஸ்கிருதம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''உலகத்திலேயே தொன்மையான மொழி சமஸ்கிருதம். இந்தியாவை ஒன்றாக இந்த மொழி இணைக்கிறது. இந்த நாளில் நாட்டுக்கு எனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

பிரதமர், அமைச்சர் இருவருமே சமஸ்கிருத மொழியில், தங்களின் பதிவுகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

சினிமா

18 mins ago

சினிமா

27 mins ago

சினிமா

30 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

28 mins ago

சினிமா

46 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

40 mins ago

சினிமா

51 mins ago

சினிமா

54 mins ago

வலைஞர் பக்கம்

58 mins ago

மேலும்