திறமையான மாணவர்களுக்குத் தனிப்பள்ளி; ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி: உத்தரகாண்ட் முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

திறமையான மாணவர்களுக்கெனத் தனிப்பள்ளி உருவாக்கப்பட்டு அங்கு ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ''உத்தரகாண்டில் திறமையான மாணவர்களுக்காகத் தனியாக ஒரு பள்ளி திறக்கப்படும்.

6 முதல் 12-ம் வகுப்பு வரை திறன்வாய்ந்த ஆசிரியர்களால் அங்கே கல்வி கற்றுத் தரப்படும். இங்கு பயில விரும்பும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். இங்கு பயிலும் அனைத்து ஏழை மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும்.

திறமைமிகு மாணவர்கள் கடினமாக உழைத்தால் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசே வழங்கும். உதாரணத்துக்கு சாமோலி பகுதியைச் சேர்ந்த மாணவர் லண்டன் கலைப் பள்ளியில் படிக்கத் தேர்வாகி உள்ளார். அவரின் வெளிநாட்டுக் கல்விக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசே செய்துள்ளது.

அதேபோல மாநிலத்தில் தரமான உயர் கல்வி உறுதி செய்யப்படும். மேலும் தேசிய அளவில் சட்டக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக்காக ரெசிடன்ஷியல் அறிவியல் கல்லூரி, திறன் மேம்பாட்டுக் கல்லூரி தொடங்கப்படும்'' என்று முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்