போட்டி தேர்வுகளுக்கு தயாராக தமிழில் ‘என்ட்ரி’ இ-கற்றல் செயலி

By செய்திப்பிரிவு

இந்தியாவின் சிறந்த கற்றல் செயலிகளில் ஒன்று ‘என்ட்ரி’ (Entri). இதை பயன்படுத்தி போட்டித் தேர்வுகளான டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தகுதித் தேர்வு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு, ரயில்வே தேர்வு வாரியம், இன்சூரன்ஸ் மற்றும் ஆங்கில பேச்சுப் பயிற்சி போன்றவற்றுக்கு தயாராகலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பாடங்கள் சார்ந்த வீடியோக்கள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள், மாதிரி வினாத்தாள், விநாடி வினா, பொது அறிவு மற்றும் அன்றாடச் செய்திகள் போன்றவற்றை இச்செயலி மூலம் பெறலாம்.

முகமது ஹிசாமுதீன், ராகுல் ரமேஷ் ஆகியோரால் கடந்த 2017-ல் இந்தச் செயலி தொடங்கப்பட்டது. உலகின் முன்னணி தொழில்நுட்ப தொடக்க (ஸ்டார்ட்அப்) செயலியான LearnLaunch Accelerator செயலியால் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் ஸ்டார்ட்அப் செயலி ‘என்ட்ரி’ ஆகும். இது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களது கனவுப் பணியை தொடர உதவியுள்ளது.

ஆண்ட்ராய்டு பயன்படுத்துவோர் கூகுள் பிளேஸ்டோர் அல்லது https://entri.me/ என்ற இணைப்பு மூலமாக ‘என்ட்ரி’ செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்