ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; 99.34%, 96.84% மாணவர்கள் தேர்ச்சி

By செய்திப்பிரிவு

சிஐஎஸ்சிஇ நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் முறையே 99.34%, 96.84% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சியின் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்ளுக்கு முந்தைய தேர்வுகள் மற்றும் அக மதிப்பீட்டு அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 10) மாலை 3 மணிக்கு வெளியாகின. இதில் ஐசிஎஸ்இ பொதுத் தேர்வில் 99.34% மாணவர்களும் , ஐஎஸ்சி பொதுத் தேர்வில் 96.84% மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு முடிவுகளை cisce.org மற்றும் results.cisce.org என்ற இணையதளங்களில் காணலாம்.

குறுஞ்செய்தி மூலமாகவும் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். அதற்குத் தங்களின் ஐடி எண்ணை 09248082883 என்ற எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டியது அவசியம். ICSE/ISC (Unique ID) என்ற முறையில் அனுப்பினால் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

இதுகுறித்து, ’’அசாதாரண சூழல் காரணமாக மெரிட் பட்டியலை 2020-ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளுக்கு வெளியிடவில்லை. மாணவர்களுக்கான டிஜிட்டல் சான்றிதழை, 48 மணி நேரம் கழித்து அரசின் டிஜிலாக்கர் செயலி மூலம் பெறலாம்’’ என்று சிஐஎஸ்சிஇ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்