ஆன்லைன் கல்வியால் உருவாகும் டிஜிட்டல் இடைவெளி: டெல்லி கல்வி அமைச்சர் பேட்டி

By செய்திப்பிரிவு

ஆன்லைன் கல்வி மாணவர்களிடையே டிஜிட்டல் இடைவெளியை ஏற்படுத்தலாம் என்று டெல்லி கல்வி அமைச்சரும் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கரோனா சூழல் ஆன்லைன் கல்வியை நோக்கி நம்மைச் செல்ல வைத்துள்ளது. எனினும் இம்முறையால் டிஜிட்டல் இடைவெளி ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் டெல்லி அரசு, மாணவர்களைச் சென்றடைந்து அவர்களைக் கல்வியில் இணைய வைக்கும் கல்வி முறையை அமல்படுத்த உள்ளது.

மனித உணர்வுகளோடு கற்றல் என்பது இதில் பிரதானமாக இருக்கும். ஆசிரியர்களையும் மாணவர்களையும் இணைத்து, கற்பித்தலை நிகழ்த்துவது எங்களின் இலக்கு. இதில் ஆசிரியர்கள், மழலையர் பள்ளி முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாட்ஸ் அப் வழியாக தினசரிப் பயிற்சிகளை வழங்குவர், பின்னூட்டங்களையும் பெறுவர்.

ஸ்மார்ட்போன் அல்லது வாட்ஸ் அப் இல்லாதவர்களுக்கு சாதாரண போன் மூலம் அனைத்துத் தகவல்களும் தெரிவிக்கப்படும். அதே நேரத்தில் டெல்லி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நடத்தும் நேரடி ஆன்லைன் வகுப்புகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்வார்கள். அவர்களுக்கும் வாட்ஸ் அப் மற்றும் போன் அழைப்பு மூலம் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும்.

கரோன வைரஸ் அச்சத்தால் மாணவர்கள் தங்களின் படிப்புகளை இழந்துவிடக் கூடாது என்பதை டெல்லி அரசு உறுதி செய்யும்'' என்றார் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

13 mins ago

சினிமா

16 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

14 mins ago

சினிமா

32 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

26 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

40 mins ago

வலைஞர் பக்கம்

44 mins ago

சினிமா

49 mins ago

மேலும்