‘இந்து தமிழ் திசை’ - ‘ஆர்ட்மேனியா’ இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ‘கிராஃப்ட் சேலஞ்ச்’ - இணையவழி கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சி

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘ஆர்ட்மேனியா’ உடன் இணைந்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கான ‘கிராஃப்ட் சேலஞ்ச்’ எனும் 5 நாள் பயிற்சியை வழங்கவுள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம்வழி முன்னெடுத்து வருகிறது.

ஜூலை 6 முதல் 10 வரை

அதன் ஒருபகுதியாக, ‘ஆர்ட்மேனியா’ உடன் இணைந்து வீட்டிலுள்ள காகிதக் கழிவுகளைப் பயன்படுத்தி, பயனுள்ள கைவினைப் பொருட்களைச் செய்யும் ‘கிராஃப்ட் சேலஞ்ச்’ எனும் 5 நாள் இணையவழி பயிற்சியை வழங்கவிருக்கிறது. இப் பயிற்சி ஜூலை 6-ல் தொடங்கி 10-ம் தேதிவரை நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு, கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் முறை பற்றிய விளக்கமான வீடியோ நாள்தோறும் அனுப்பிவைக்கப்படும். அந்த வீடியோவைக் கொண்டு, கைவினைப் பொருட்களை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம். பங்கேற்பாளர் அனைவரும் வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்படுவார்கள். இந்தப் பிரத்யேக வாட்ஸ்அப் குழுவில் அவர்களது கைவினைப் பொருட்களைச் சமர்ப்பித்து, இ-சான்றிதழைப் பெறலாம். இதில் சிறந்த 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் நிகழ்வில் பங்கேற்க இலவசமாக அனுமதிக்கப்படுவர்.

இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.499. ஆனால், பள்ளி மாணவர்களுக்கான சிறப்புச் சலுகையாகரூ.299 செலுத்தினாலே போதும்.பங்கேற்க விரும்புபவர்கள் https://connect.hindutamil.in/Artmania.php என்ற இணையத்தில்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்