மாணவர்களுக்கு பாடங்கள் குறைப்பு: ஆலோசனை வழங்குமாறு கல்வி அமைச்சகம் அழைப்பு

By பிடிஐ

கரோனா காரணமாக விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டத்தைக் குறைப்பது தொடர்பாக #SyllabusForStudents2020 என்ற ஹேஷ்டேகில் ஆலோசனை வழங்குமாறு கல்வி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

கரோனா ஊரடங்கை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு மார்ச் 16 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. எனினும் கரோனா தொற்றுப் பரவலால் கல்வி நிலையங்களின் திறப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

இதனால் புதிய கல்வியாண்டில் மாணவர்களின் பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''ஆசிரியர்கள், பெற்றோர்களின் கோரிக்கைகளை அடுத்து, மாணவர்களுக்கான பாடத் திட்டங்களைக் குறைப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ''பாடத்திட்டத்தைக் குறைப்பது தொடர்பாக அனைத்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தங்களின் ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். அவற்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அல்லது என்னுடைய ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் #SyllabusForStudents2020 என்ற ஹேஷ்டேக் உடன் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம். பாடத்திட்டக் குறைப்பு குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்போது இவற்றையும் கவனத்தில் கொள்ளும்'' என்று அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்