பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கு வாய்மொழித் தேர்வுக்கான புதிய வழிமுறைகள் அறிவிப்பு

By அ.அருள்தாசன்

பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கு வாய்மொழித் தேர்வுக்கான புதிய வழிமுறைகளை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் எஸ். சந்தோஷ்பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் தமிழக உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி கரோனா காரணமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வாய்மொழி தேர்வின் புதிய விதிமுறைகளின்படி, பிஎச்டி ஆராய்ச்சி மாணவர்களின் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு, 3 வழிகளில் நடத்த அனுமதிக்கப்படுவர்.

முதல் வழிமுறையில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் வழியில், அதாவது புறத்தேர்வாளர், ஆய்வு வழிகாட்டி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் ஆராய்ச்சி மையத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிந்து வாய்மொழி தேர்வை நடத்தலாம்.

2-வது வழிமுறையில் வாய்மொழி தேர்வு முழுவதும் இணைய வழியில் பல்கலைக்கழக அனுமதியுடன் நடத்த அனுமதிக்கப்படுவர்.

3-வது வழிமுறையில் ஆராய்ச்சி வழிகாட்டியானவர் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கொண்டு, ஆராய்ச்சி மாணவர் மற்றும் புறத்தேர்வாளர் ஆராய்ச்சி மையத்துக்கு வந்து அல்லது இணையம் மூலமும் கலந்து கொள்ளலாம்.

மற்ற பேராசிரியர்களும் மற்ற மாணவர்களும் இணையம் மூலம் கலந்து கொள்ளலாம். முனைவர் பட்ட கலந்தாய்வு குழு கூட்டம் மற்றும் முன்வாய்மொழி தேர்வை இந்த வழிமுறைகளில் நடத்த அனுமதிக்கப்படும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்