அறிவியலில் பேரார்வம் கொண்டால் அணுசக்தி விஞ்ஞானி ஆகலாம்- விஞ்ஞானி பி.வெங்கட்ராமன் உறுதி

By ம.சுசித்ரா

பேரார்வத்துடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டால் அணுசக்தி விஞ்ஞானி ஆகலாம் என்று அணுசக்தி விஞ்ஞானி பி. வெங்கட்ராமன் தெரிவித்தார்.

தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றத்துடன் (என்டி ஆர்எஃப்) இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘விஞ்ஞானி ஆவது எப்படி?’ என்ற 5 நாள் இணைய வழி பயிலரங் கத்தின் இறுதி அமர்வு நேற்று நடைபெற்றது. இதில் ‘அணுசக்தி விஞ்ஞானி ஆவது எப்படி?’ என்ற தலைப்பில் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பி. வெங்கட்ராமன் பேசியதாவது:

அறிவியல் பூர்வமான சிந்தனை யும் பொறியியலும் கைகோக்கும் போதுதான் சமூகத்துக்குப் பயன் படக்கூடிய அறிவியல் கண்டு பிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. அப்படிப்பட்டத் துறைதான் அணுசக்தித் துறை. கதிர்வீச்சுடன் தொடர்புடையதால் இது அபாய கரமான பணி என்ற அச்சம் பர வலாக உள்ளது. ஆனால், இது மிக வும் பாதுகாப்பான துறையே என் பதற்கு என்னுடைய 35 ஆண்டுக் கால பணிவாழ்க்கையே சாட்சி.

என்.டி.டி. துறையா னது நம்முடைய அன்றாட வாழ் க்கையோடு மிகவும் நெருக்க மானது. உதாரணத்துக்கு, வீட்டுச் சமையல் காஸ் சிலிண்டரின் நடுவில் வட்ட வடிவில் ஒரு பட்டை தெரியும். அது சிலின்டரின் மேல் பகுதியையும் கீழ் பகுதியையும் பற்றவைத்து (வெல்டிங்) இணைக்கப்பட்ட பகுதியாகும். இந்த பகுதியில் நுண்ணிய துவா ரம் இருந்துவிட்டால் கேஸ் கசிந்து விபத்து நேரும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் வெல்டில் சரியாகச் செய்யப்பட்டு இருக்கிறதா என்பது கதிர்வீச்சு மூலமாகத்தான் சோதிக்கப்படுகிறது. இதேபோல தாயின் கருவறையில் இருக்கும் சிசுவின் ஆரோக்கியத்தைச் சோதிக்கச் செய்யப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் தொடங்கி எம்.ஆர்.ஐ., சிடி ஸ்கேன், எண்டோஸ்கோப்பி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பலவற்றில் என்.டி.டி. துறையின் பங்குள்ளது.

கரோனா நோய்த் தொற்றைச் சோதிக்க தெர்மல் இமேஜிங் பயன்படுத்தப்படுகிறது. அகச்சிவப்பு கதிர்களைப் பாய்ச்சி உடலின் வெப்ப நிலையைத் திரை யில் காட்டும் இந்தத் தொழில் நுட்பத்தை இந்தியாவில் கண்டு பிடித்தது என்.டி.டி. துறையே. இதேபோல வேளாண்மை முதல் விண்வெளி ஆராய்ச்சியிலும் பாது காப்புத் துறையிலும்கூட இத் துறையின் பங்களிப்பு பெரு மளவு உள்ளது. இளநிலை பொறி யியல் படித்தவர்கள் தொடங்கி முதுநிலை அறிவியல் பட்டப் படிப்பு, எம்.டெக்., அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் வரை அனைவருக்கும் இத்துறை யில் மிக அதிக சம்பளத்துடன் கூடிய பணி வாய்ப்புகள் காத்திருக் கின்றன. கடமையே என்று செய் வதல்ல விஞ்ஞானி பணி. பேரார் வத்துடன் ஆழமான முறையான ஆராய்ச்சியில் ஈடுபட்டால் அணு சக்தி விஞ்ஞானியாக ஜொலிக் கலாம். இவ்வாறு விஞ்ஞானி பி. வெங்கட்ராமன் பேசினார்.

5 நாள் இணைய வழி பயில ரங்கில் சிறப்பாகப் பங்கேற்ற மாண வர்கள், கல்பாக்கம் அணு உலை, ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுத ளம், ஆவடி ராணுவ பீரங்கி ஆலை ஆகியவற்றை காண்பதற்கான சிறப்பு ஏற்பாட்டை இந்திய அரசு டன் இணைந்து ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் மேற்கொண்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்