கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு தொடர்பாக தூத்துக்குடி வஉசி கல்லூரி- மீன்வளக் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

By ரெ.ஜாய்சன்

கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு தொடர்பாக தூத்துக்குடி வஉசி கல்லூரியின் விலங்கியல் துறை மற்றும் மீன்வளக் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

தூத்துக்குடியில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் வஉசி கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி முதல்வர் ப.சுந்தரமூர்த்தி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

வஉசி கல்லூரி விலங்கியல் துறை தலைவர் து.ராதிகா முன்னிலை வகித்தார்.

ஆராய்ச்சி துறையில் தகவல் பரிமாற்றம், பேராசிரியர்களின் துறைசார் அறிவு பகிர்வு, மாணவ, மாணவியருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறைகள் நடத்துவது, இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து ஆராய்ச்சி திட்டங்களை நடத்துவது, ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவது, மாணவ, மாணவியரை சுயதொழில் முனைவோராக்கிட பயிற்சி பட்டறைகளை நடத்துவது ஆகியவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023-ம் ஆண்டுவரை மூன்றாண்டு காலம் செயல்பாட்டில் இருக்கும் என, வஉசி கல்லூரி முதல்வர் வீரபாகு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்