சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பள்ளிகளில் ‘ஷிப்ட்’ முறையை நடைமுறைப்படுத்தலாம்: அரசுக்கு ஆசிரியர் அமைப்பு யோசனை

By செய்திப்பிரிவு

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பள்ளிகளில் ‘ஷிப்ட்’ முறையை நடைமுறைப்படுத்தலாம் என்று அரசுக்கு ஆசிரியர்அமைப்பு யோசனை தெரிவித்துள் ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன், பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனுக்கு அனுப்பியுள்ள மனு:

மாணவர்கள் நலன் தொடர்பாக, வரும் கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒருசிலயோசனைகளை எங்கள் கூட்டமைப்பு சார்பில் முன்வைக்கிறோம்.

சுழற்சி முறையில்...

பள்ளிகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் சுழற்சி முறையை நடைமுறைப்படுத்தலாம். தொடக்கப்பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல்5-ம் வகுப்பு வரை ஒருநாளும், அடுத்த நாள் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களை வரவழைக்க வேண்டும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு மாணவர்கள் ஒருநாளும், 9, 10-ம் வகுப்பு மாணவர்களை அடுத்த நாளும், பிளஸ் 1, பிளஸ் 2மாணவர்களை மறுநாளும் வரவழைக்கலாம்.

வகுப்பறையில் 15 மாணவர்கள் அமரும் விதமாக இருக்கைகளை அமைக்க வேண்டும். மாணவர்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய சோப்பு, கிருமிநாசினி வழங்க வேண்டும்.

பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்

10-ம் வகுப்பு, பிளஸ் 2பாடத்திட்டத்தில் தேவையற்ற பாடங்களை நீக்கி, மாணவர்களை தேசிய நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் இருப்பதை போன்று கொள்குறி வினாக்கள் அதிக அளவில் இருக்குமாறு வினாத்தாளை வடிவமைக்க வேண்டும். தேவைப்படும் சூழலில்ஆன்லைன் கல்வியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

58 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

42 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

20 mins ago

மேலும்