இடமாறுதல் கலந்தாய்வை உடனே நடத்துக: ஆசிரியர் முன்னேற்றப் பேரவை கோரிக்கை

By செய்திப்பிரிவு

இடமாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என்று அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

ஆண்டுதோறும் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு, கல்வி ஆண்டின் தொடக்கமான ஜூன் மாதத்தில் நடக்கும். அதற்கான வழிமுறைகள், ஏப்ரல், மே மாதங்களில் வெளியாகும்.

இந்த ஆண்டு, பள்ளிகள் திறப்பு தள்ளிப் போயிருப்பதால், கலந்தாய்வு குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், இட மாறுதல் கலந்தாய்வை நடத்தக் கோரி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை தலைவர் ஆரோக்கியதாஸ் பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''தமிழக அரசு வெளியிட்ட செலவினங்களுக்கான கட்டுப்பாடுகளில், பொது மாறுதல்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, கூறப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை, ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இட மாறுதல் பெறும் ஆசிரியர்களுக்கு எந்த செலவினமும், பயணப்படியும், அரசால் வழங்கப்படுவது இல்லை. எனவே கல்வித்துறை இடமாறுதல் கலந்தாய்வை நடத்துவதில், எந்தப் பிரச்னையும் இருக்காது. அதேபோல தமிழக அரசுக்கு, எந்த நிதி இழப்பும் ஏற்படாது.

எனவே, கலந்தாய்வு வழியாக ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியிடங்களுக்கு நேரடி நியமனம் வழியாக, புதிய ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்''.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்