பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் 25-க்குள் முடிக்க வேண்டும்: செப்.1-ல் வகுப்புகள் தொடங்க ஏஐசிடிஇ உத்தரவு

By செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புக்கான கலந் தாய்வை ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) உத்தர விட்டுள்ளது

ஏஐசிடிஇ நிர்வாகக் குழுவின் 133-வது கூட்டம் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி நடந்தது. அதில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் கல்வி ஆண்டு அட்டவணை, அங்கீகாரம் புதுப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இந்நிலையில், ஏஐசிடிஇ-யின் உறுப்பினர் செயலர் ராஜீவ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தொழில்நுட்ப கல்வி நிறுவனங் களுக்கான அனுமதி பெறுவதற் காக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 15-ம் தேதிக்குள் அனுமதியை பெற்றுக்கொள்ள லாம். பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தை ஜூன் 30 வரை பெற் றுக்கொள்ளலாம். முதல்முறை யாக ஆன்லைன் மூலமே அங்கீ காரம் வழங்க ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது. அதற்காக, கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ இணைய தளத்தின் ஒப்புதல் விரிவாக்கம் பகுதியில் உள்ள கடிதத்தை பதி விறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் அனுமதி பெறலாம்.

அதேபோல், 2020- 21-ம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் படிப்பு களுக்கு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் முதல்கட்ட கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும். 2-ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதேபோல், காலி இடங்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.

பொறியியல் படிப்புக்கான கல்வி ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கும். இதர தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (பாலிடெக்னிக், ஐடிஐ உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள்) ஆகஸ்ட் 1-ம் தேதி வகுப்புகள் தொடங்க வேண்டும். மேலும், முதுநிலை பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

தொலைதூர கல்வி மாணவர் சேர்க்கை, கல்வி ஆண்டு தொடக் கம் உள்ளிட்டவை குறித்தும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

30 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்