பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க பரிசீலனை: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

By செய்திப்பிரிவு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க பரிசீலனை செய்துவருவதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கு மார்ச் 24-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு மார்ச் 26-ம் தேதியும் பொதுத் தேர்வுகள் முடிவடைய உள்ளன.

இதைத் தொடர்ந்து 10-ம்வகுப்புக்கு மார்ச் 27-ல் தொடங்கிஏப்ரல் 13-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளன. இதற்கிடையே கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழகத்தில் ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத்தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும். தேர்வு மையங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. எனினும், மாணவர்கள் நலன்கருதி பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மட்டும் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறும்போது, ‘‘தேர்வுமையங்களில் கிருமி நாசினிதெளித்தல் போன்ற போதுமானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் தலா 2 தேர்வுகளே மீதமுள்ளன. எனவே, தேர்வுகளை மாணவர்கள் அச்சமின்றி எதிர்கொள்ளலாம்.

அதேநேரம் வைரஸ் தொற்றுபரவல் தீவிரமானால் பத்தாம்வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை செய்துவருகிறோம். தேர்வுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால் வரும் நாட்களில் நிலவும் சூழலைப் பொறுத்து இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி செயலாளர் தீரஜ்குமாரிடம் கேட்டபோது, ‘‘பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இனிவரும் நாட்களில் நிலவும் சூழலின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார். தேர்வுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால் வரும் நாட்களில் நிலவும் சூழலைப் பொறுத்து இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்