வேளாண்மை சந்திக்கும் சவால்கள்: மாநில அளவிலான நாடகப் போட்டியில் மேட்டுப்பாளையம் அரசுப் பள்ளி முதலிடம்

By செ.ஞானபிரகாஷ்

தேசிய அறிவியல் தின விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற நாடகப் போட்டியில் மேட்டுப்பாளையம் அரசுப் பள்ளி முதலிடம் பெற்றது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மாநாட்டு சங்கம், புதுவை அரசின் சுற்றுச்சூழல், அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் புதுவை அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய தேசிய அறிவியல் தின விழா புதுவை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் புதுவை முழுவதிலும் இருந்து 60-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் குழுக்கள் பங்கேற்றன. அறிவியல் தொடர்பான நாடகப் போட்டியில் மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நாடகம் முதல் பரிசு பெற்றது.

ஆசிரியை அனிதா தலைமையில், ''அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின் வேளாண்மை சந்திக்கும் சவால்கள்'' என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது.

வேளாண்மையின் இன்றைய நிலை பற்றி சிந்தனையைத் தூண்டும் வகையில் மாணவர்களின் நாடகம் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டது. இதனால் அதுவே சிறந்த நாடகமாக நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு வென்றது.

முதலிடம் பெற்ற மாணவர்களை சிறப்பு விருந்தினர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் சுழற்கேடயம் வழங்கிப் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்