துளிர் விநாடி-வினா போட்டியில் கல்லாவி அரசு மகளிர் பள்ளி மாநிலத்தில் முதலிடம்: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பாராட்டு

By செய்திப்பிரிவு

துளிர் விநாடி-வினா போட்டியில் கல்லாவிஅரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான துளிர் விநாடி - வினா போட்டி நடந்தது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் ஈரோட்டில் நடந்த மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்றனர். மண்டல அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சென்னை மகாபலிபுரத்தில் மாநில அளவில் நடந்த போட்டியில் பங்கேற்றனர்.

இப்போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் நட்சத்திரா, 9-ம் வகுப்பு படித்து வரும் காவியா, நியாஸ் ஆகியோர் பங்கேற்று மாநில அளவில் முதலிடம் பெற்று கேடயம்மற்றும் சான்றிதழ்களை பெற்றனர்.

சாதனை படைத்து பள்ளிக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த மாணவிகளை மாவட்ட ஆட்சியர் பிரபாகர் பாராட்டியதுடன், 'மேலும் தங்கள் திறமையை வளர்த்துமேன்மேலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்' என்றுவாழ்த்தினார்.

கல்லாவி ஊராட்சி மன்றதலைவர் ராமன், தலைமை ஆசிரியைரேணுகாம்பாள், வழிகாட்டி ஆசிரியர்கள்அசோக்குமார், ரெஜினாமலர், அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்