நாட்டை பாதுகாக்க வீரர்கள் எல்லை தாண்ட தயங்குவதில்லை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் பெருமிதம்

By செய்திப்பிரிவு

‘‘நாட்டை பாதுகாக்க நமது பாதுகாப்பு படையினர் தற்போது எல்லையை கடக்கவும் தயங்குவதில்லை’’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 2018-ம் ஆண்டு பிப்.14-ம் தேதி இந்தியபாதுகாப்புப் படையினரின் வாகனம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைப் படை தாக்குதலால் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிப்.26-ம் தேதி பாகிஸ்தான் எல்லையை கடந்து சென்று பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, இந்திய விமானப்படையின் போர் விமானம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கீழே விழுந்தது.

அதனை ஓட்டிய விங் கமாண்டரான தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். இதனையடுத்து, இந்தியா, ஐ.நா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் நெருக்கடியால், கமாண்டரை பத்திரமாக பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது.

இந்நிலையில், பாலகோட் விமானத் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவைமுன்னிட்டு டெல்லியில் நேற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் தனதுட்விட்டர் பக்கத்தில், “பயங்கரவாதத்தைகையாளுவதில் இந்தியாவின் அணுகுமுறை பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. ஏனெனில், அச்சுறுத்தலுக்கு எதிராக நாட்டைப் பாதுகாக்க ஆயுதப் படைகள் இப்போது எல்லையை கடக்கவும் தயங்குவதில்லை. இதற்கு 2016-ம் ஆண்டின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் 2019-ல் பாலகோட் வான்வழித் தாக்குதல்கள்தான் சான்றாகும். இது நிச்சயமாக புதிய நம்பிக்கையான இந்தியா. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அணுகுமுறை வழியில் மாற்றத்தை கொண்டுவந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்