பி.ஏ., எம்.ஏ., தமிழ் படிப்பவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

‘‘பிஏ, எம்ஏ தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது’’ என்று தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் புகழேந்தி, "மதுராந்தகம் தொகுதியில் உள்ள மதுராந்தகம், ஈசூர், பூதூர், மோச்சேரி ஆகிய ஊர்களில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை அமைக்க அரசு ஆவன செய்யுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது: இளைய தலைமுறையினரிடம் தமிழ்இலக்கியப் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கத்தில், ‘இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை’ என்றதிட்டம் 2012-13-ல் உருவாக்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை, கோவை, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் ஒரு வாரம் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சிஅளிக்கப்பட்டது. 2012 முதல் இத்திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். அதன்படிஇந்த பயிற்சிப் பட்டறை மூலம் 1,500 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளால் பி.ஏ., எம்.ஏ., தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாங்கள் பகட்டாக பேசாமல், அமைதியாக தமிழ் வளர்சிக்காகவும், தமிழ் மாணவர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கவும் பாடுபட்டு வருகிறோம்.

இளந்தமிழர் இலக்கிய பயிற்சிப் பட்டறை திட்டம் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்